அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பியுமான சி.வி.சண்முகத்திற்கு நேற்று இரவு (ஜூன் 22) திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு முதல் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
எனினும் தற்போது வரை சி.வி.சண்முகம் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
மோனிஷா
நோயாளி மரண வழக்கு விதிமுறைகள்: டிஜிபி உத்தரவு!
ஆணாக மாறும் மேற்குவங்க முன்னாள் முதல்வர் மகள்!
எச்-1 பி விசா: அமெரிக்க அரசின் புதிய திட்டம்!