மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி இன்று (பிப்ரவரி 23) காலமானார். அவருக்கு வயது 86.
கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மனோகர் ஜோஷிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி ஜோஷி காலமானார்.
கடந்த 1937-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள நந்த்வியில் மனோகர் ஜோஷி பிறந்தார்.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஜோஷி, 1995-99 வரை மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி வகித்தார். தொடர்ந்து 1999- 2002 வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறையின் மத்திய அமைச்சராக இருந்தார். பின்னர் 2002-2004 வரை மக்களவை சபாநாயகராக பதவி வகித்தார்.
மனோகர் ஜோஷி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியாவில் தயாராகும் கூகுளின் பிக்சல் போன்கள்: விலை குறையுமா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!