மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரப்பா இன்று (மார்ச் 27 ) சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக சாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பாவிற்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து ஈஸ்வரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 100% பாஜக வெற்றி பெறும். வேறு யாரும் வெற்றி பெற முடியாது. ராகுல்காந்தி பதவி நீக்கம் தாக்கத்தை ஏற்படுத்தாது. நாங்கள் கட்டாயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம்” என்றார்.
மேலும், “அரசியலமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லை. காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தனர். அதை நாங்கள் தற்போது நீக்கி உள்ளோம். இதனால் பாதிப்பு ஏற்படாது.
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்று கூறினார்.
இராமலிங்கம்
மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு? முதல்வர் ஸ்டாலின் பட்டியல்!
“சிவாஜி இல்லனா நான் இல்ல”: பாரதிராஜா