ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில் ரூ.600 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நேற்று ஹேமந்த் சோரன் தொடர்புடைய இடங்களில் 7 மணி நேரம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
#WATCH | Former Jharkhand CM and JMM executive president Hemant Soren leaves from PMLA Court in Ranchi.
Hemant Soren has been sent to judicial custody for one day. pic.twitter.com/jMz4yAveLm
— ANI (@ANI) February 1, 2024
இரவு 8.30 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அமலாக்கத் துறையின் கைது காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 1) பண மோசடி வழக்கில் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கவுள்ளது.
இந்தசூழலில் ராஞ்சியில் உள்ள பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கேட்டது.
ஆனால் ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் வழக்கை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஸ்பெய்னில் முதல்வர் : ரூ.2500 கோடி முதலீடு… 1000 பேருக்கு வேலை!
ED ரெய்டு : பங்குச்சந்தையில் ஒரேநாளில் சரிந்த இந்தியா சிமெண்ட்ஸ் வர்த்தகம்!