பட்டியலின இளைஞரை ஆபாசமாகத் திட்டிய விவகாரத்தில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே பட்டியலின இளைஞர் கோவிலுக்குள் வந்ததால் அவரை ஆபாசமாகத் திட்டிய திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி கிராமத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில், கும்பாபிஷேகம் முடிவுற்று, மண்டல பூஜை நடந்து வருகிறது.
அந்த கோவிலுக்குப் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரவீன் சென்று அங்கிருந்தவர்களிடம் வாய்தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த, அந்த ஊராட்சியின் தலைவரும், திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், கோயிலுக்குள் புகுந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது தந்தையைக் கிராம மக்கள் முன்னிலையில் நிற்க வைத்து,
கோயிலுக்குள் புகுந்து ஏன் சண்டையிட்டாய் என்று கேட்டு, ஆபாசமான வார்த்தைகளால் அந்த இளைஞரைத் திட்டும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடிநோ வைரலானதை அடுத்து மாணிக்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பிரவீன்குமார் அளித்த புகாரின் பேரில் இரும்பாலை காவல் நிலைய போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடைபெற்று வருகின்றது.
மோனிஷா
பிபிசி ஆவணப்படம்: பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – டி.ஆர். பாலு