மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நியாய யாத்ரா தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 6) அவர் கும்லாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முடிவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்னும் இந்த கூட்டணியில் தான் இருக்கின்றனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மட்டுமே இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் இணைந்துள்ளார். அவர் எதற்காக வெளியேறினார் என்பதை உங்களால் யூகிக்க முடியும். அவர் வெளியேறினால் பரவாயில்லை. பீகாரில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் இணைந்து தான் போராடுவோம்” என்றார்.
இந்தியா கூட்டணிக்குள் உள் பூசல்கள் இருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த ராகுல் காந்தி, “மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ளார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாகக் கட்சிகள் இடையே நிலவும் வேறுபாடுகள் சாதாரணமானது தான்” எனக் கூறினார்.
முன்னதாக மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இல்லை. 40 தொகுதிகளிலும் தனித்துத் தான் போட்டியிடுவோம். இனி காங்கிரசுக்கு ஒரு இடம் கூட தரப்போவது கிடையாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Thalapathy 69: விஜயின் சம்பளம் இத்தனை கோடியா?
ஜாமீன் கேட்ட திமுக எம்எல்ஏ மகன்,மருமகள் : கோர்ட் உத்தரவு!