வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக 195 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் இன்று (மார்ச் 8) 39 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கர் 5, கர்நாடகா 7, கேரளா 16, லட்சத்தீவு 1, மேகாலயா -2, நாகலாந்து -1, சிக்கிம் -1, தெலங்கானா -4, திரிபுரா 1 ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 2024 மக்களவைத் தேர்தலிலும் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல் ராஜ்னங்காம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ்.
இந்தசூழலில் அம்மாநில காங்கிரஸ் தலைவரான பூபேஷ் பகேலுக்கு எம்.பி.தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா, சசி தரூர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகின்றனர்.
50 வயதுக்கு உட்பட்டவர்கள் 12 பேர், 50-60 வயதுடையவர்கள் 8 பேர், 61-70 வயதுடைய 12 பேர், 71-76 வயதுடைய 7 பேர் முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் இவர்களில் 14 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள், 24 பேர் ஓபிசி, எஸ்.சி., எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி : துணை ஜனாதிபதி பங்கேற்பு!