ஆவணங்களை திரித்த புகார்: லதா ரஜினி காந்துக்கு எதிராக உத்தரவு!

அரசியல்

லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கில் 2 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கினார். மீடியா ஒன் குளோபல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. படத்தை முடிப்பதற்கு பணம் போதாததால்  மீடியா ஒன் குளோபல் நிறுவனம் கடன் வாங்க முயற்சி செய்தது.

இதற்காக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவிடம் உதவி கேட்டபோது, லதா ரஜினிகாந்த், பல்வேறு ஆவணங்களைக் கொடுத்து ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் கடன் வழங்க பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.

alt="Forgery document case – verdict in favor of Lata Rajinikanth"

இந்த ஆவணங்களை ஏற்று கொண்டு ஆட் பியூரோ நிறுவனமும் ரூ.6.84 கோடி கடன் வழங்கியுள்ளது. ஆனால் அந்தக் கடனை மீடியா ஒன் குளோபல் நிறுவனம் சரியாக செலுத்தவில்லை என்றும், லதா ரஜினிகாந்த் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும் ஆட் பியூரோ நிறுவனம் பெங்களூரு அல்சூர்கேட் போலீசில் புகார் அளித்தது.

இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரு சிவில் கோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு மனுவை தாக்கல் செய்து, நிதி விஷயங்கள் குறித்து அந்த நிறுவனம் கருத்து கூற தடை உத்தரவு பெற்றார்.

இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு அந்த தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள மாஜிஸ்ரேட்டு கோர்ட்டில் புகார் ஒன்றை தாக்கல் செய்தது. அதை விசாரித்த கோர்ட்டு தடை உத்தரவை நீக்கியதுடன், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த புகார் குறித்து விசாரிக்கவும் போலீசுக்கு உத்தரவிட்டது.

alt="Forgery document case – verdict in favor of Lata Rajinikanth"

ஆனால் 2016ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றம், லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றமோ அவருக்கு எதிரான வழக்கை தொடர அனுமதி வழங்கியது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் பாதியை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். அதாவது அவருக்கு எதிரான ஏமாற்றுதல், தவறான தகவல்களை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு என 2 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

அதே நேரத்தில் ஆவணங்களை திரித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கலை.ரா

தமிழ் ராக்கர்ஸ் : பைரசியை முடிவுக்கு கொண்டு வருவாரா அருண் விஜய்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.