கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாதுகாக்கப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள் வாழ்ந்து வருகின்றன.
அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்குள்ள சாலைகளில் அதிகளவில் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும். இதனால் அந்தப்பகுதியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதியளிக்கப்படுகிறது.
கோவை கோட்டூர் பகுதியை சேர்ந்த மிதுன் தனது காரில் ஹைபீம் விளக்குகளை ஒளிரவிட்டப்படி, யானையை துரத்தும் வீடியோவை வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார்.
அந்த வீடியோவில், ஹைபீம் விளக்குகளை ஒளிரவிட்டபடி மிதுன் தனது காரில் பயணிக்கும்போது, சாலையில் சென்ற யானை பயந்து காட்டிற்குள் ஓடியது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதைப்பார்த்த பலரும் மிதுனை கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர்.
இந்த வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியான நவமலையில் காரில் ஹைபீம் விளக்குகளை ஒளிரவிட்டபடி யானையை துரத்தியது, கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் மிதுன் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மிதுனுக்கு வனத்துறை ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்ட்ரல் – அரக்கோணம்: இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து!
இந்த வருஷம் கப்பு எங்களுக்கு தான்: உறுதியாக சொல்லும் சென்னை ரைனோஸ்