தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணம் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், ஃபோர்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தனது எக்ஸ் தளத்தில் இன்று (செப்டம்பர் 11) பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றார். அங்கு பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டுள்ளார்.
இந்த நிலையில்தான்,” ஃபோர்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். தமிழ்நாடு மற்றும் ஃபோர்ட் நிறுவனத்திற்கு இடையேயான மூன்று தசாப்த்தங்களுக்கு நீடித்த உறவை புதுப்பித்து, உலகிற்காகத் தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி செய்வது பற்றி ஒன்றாக ஆராய்ந்தோம்” என்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.
ஃபோர்ட் மோட்டார்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி வந்தது. குறிப்பாக இந்தியாவில் அந்த நிறுவனத்தின் ஒரே கார் உற்பத்தி தொழிற்சாலை சென்னையில் இயங்கி வந்தது. ஆனால் போட்டியின் காரணமாக நிறுவனத்தின் வியாபாரம் கணிசமாகச் சரிந்தது. இதனால் ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவை விட்டு 2021 ஆண்டு வெளியேறியது.
இதற்குப் பின் மீண்டும் இந்தியச் சந்தைக்குள் பெட்ரோல், டீசல் எஞ்சின் கொண்ட கார்கள் மற்றும் எலக்ட்ரிக் எஞ்சின் கொண்ட கார்களை உற்பத்தி செய்யப்போவதாகச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் ஃபோர்ட் நிறுவனத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மெஸ்சி வளர்க்கும் நாயின் விலை எவ்வளவு தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்!
”விவாகரத்து குறித்து என்னிடம் கேட்கவில்லை”: ஜெயம் ரவி மனைவி வேதனை!
விடாமல் டார்கெட் செய்த ட்ரம்ப்… சரமாரியாக பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ்!