வரலாற்றில் முதன்முறையாக உச்ச நீதிமன்ற விசாரணை நேரலையில்!

அரசியல்

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக விசாரணை நிகழ்வுகள் நேரலையில் ஒளிப்பரப்பப்படுகின்றன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றின் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை போல,

உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணைகள் மற்றும் தீர்ப்பை காணொளியாக பதிவு செய்யவும்,

நீதிமன்ற நடவடிக்கைகளையே நேரடியாக ஒளிபரப்புவும் வேண்டும் என்றும் தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வந்தன.

இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பொது மக்களுக்கு நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள உரிமை உண்டு, இது நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்று கூறி நேரலை செய்ய ஒத்துக்கொண்டது.

மேலும் வழக்கு விசாரணைகளைப் பார்ப்பது சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தது.

ஆனால் பாலியல் வல்லுறவு வழக்குகள், திருமண உறவுகள் குறித்த வழக்குகளின் விசாரணை ஒளிபரப்பு செய்யப்பட்டால் தனிநபர்களின் அந்தரங்க தகவல்கள் வெளியாகும்,

அவற்றை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் சமூக பதற்றத்தை தூண்ட வாய்ப்புள்ள வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் மட்டும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டது.

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நேரலை செய்ய 2018 ஆம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அது நடைமுறைக்கு வரவில்லை.

இந்தநிலையில் இன்று(ஆகஸ்ட் 26) தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெற இருப்பதால் அவரது கடைசி பணி நாளில் நடைபெறும் வழக்குகளை நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், “தலைமை நீதிபதியின் பணியின் கடைசி நாளான இன்று அவருக்கு தகுந்த மரியாதை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 26, 2022 அதாவது இன்று காலை 10:30 மணி முதல் ‘ வெப்காஸ்ட் போர்ட்டல் மூலம் இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு நடக்கும் வழக்குகள் அனைத்தும் நேரலை செய்யப்படுகின்றன.

நேரலையை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கலாம்.

கலை.ரா

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *