உதயநிதி சென்ற ஹெலிகாப்டரில் சோதனை!

அரசியல்

தேர்தல் பிரச்சாரத்துக்காக உதயநிதி சென்ற ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது.

மக்களவைத் தேர்தல் இன்னும் 4 தினங்களில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நாளை பிரச்சாரம் செய்கிறார்.

உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி பிரசாரம் செய்யவுள்ளார்.

இதற்காக அவர் இன்று (ஏப்ரல் 14) ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்றார். அவர் சென்ற ஹெலிகாப்டர் தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்கியது.

அப்போது ஹெலிபேடுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். உதயநிதி கொண்டு வந்த பைகள் உட்பட அனைத்தையும் சோதனை செய்தனர்.

இதில் பணம் உட்பட வேறெதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக உதயநிதி பிரச்சாரத்துக்காக காரில் தென்காசி சென்ற போது, கரட்டு மலை சோதனைச்சாவடியில் பறக்கும் படை சோதனை நடத்தியது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக உதயநிதி சென்ற வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதுபோன்று ராமநாதபுரத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Whistle Podu: தளபதியின் தமிழ் புத்தாண்டு ட்ரீட்… படத்தின் கதை இதுதானா?

மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் : ராமநாதபுரத்தில் வாக்கு சேகரித்த அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *