ஐந்து மாநில தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ!

Published On:

| By Selvam

five state election projections

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் தேதிகளை நேற்று (அக்டோபர் 9) இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30, ராஜஸ்தான் நவம்பர் 23, மத்தியபிரதேசம் நவம்பர் 17, மிசோரம் நவம்பர் 7, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.

இந்தநிலையில் ஐந்து மாநில தேர்தல் குறித்து ஏபிபி சி ஓட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 200 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 101 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் பாஜக 127 -130 ஆளும் காங்கிரஸ் 59 -69 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 113 முதல் 125 பாஜகவுக்கு 104 முதல் 106 தொகுதிகள் கிடைக்கும்.

பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 39 முதல் 45,  காங்கிரஸ் 45 முதல் 51 மற்றவை 2 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தை போலவே சத்தீஸ்கர் மாநிலத்திலும் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் சூழல் உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி 43 முதல் 55, காங்கிரஸ் 48 முதல் 60 தொகுதிகளை கைப்பற்றும்.

பாஜகவுக்கு 5 முதல் 11 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி 13 முதல் 17, காங்கிரஸ் 10 முதல் 14, சோரம் மக்கள் முன்னணி கட்சி 9 முதல் 13, மற்றவை 1 முதல் 3 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதனால் மிசோரம் மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் சூழல் உள்ளது என்று ஏபிபி சி ஓட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

செல்வம்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

கிச்சன் கீர்த்தனா: காய்கறி சப்பாத்தி

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

‘ஜிகர்தண்டா-1’ நான் மிஸ் பண்ணிட்டேன்: ராகவா லாரன்ஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share