மதுரை ரயில் நிலையத்தில் மீன் சின்னம்: தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

அரசியல்

மதுரை ரயில் நிலைய வளாகத்தில் பாண்டியர்களின் மீன் சின்னத்தை மீண்டும் நிறுவ வலியுறுத்தி தமிழர் கட்சி சார்பில் இன்று(ஜூன் 19) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ரயில் நிலைய வளாகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களின் அரசை குறிக்கும் வகையில் மீன் சின்னம் நிறுவப்பட்டிருந்தது.

அந்த மீன் சின்னத்தை ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக ரயில்வே ஊழியர்கள் ரயில் நிலைய வாயிலில் இருந்து அகற்றினார்கள். தற்போது வரை அந்த மீன் சின்னத்தை அதே பகுதியில் வைக்கவில்லை.

இதற்காக தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை கொடுத்திருந்தார்.

வழக்கின் அடிப்படையில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தும் தற்போது வரை மீண்டும் ரயில் நிலையவளாகத்தில் மீன் சின்னத்தை நிறுவவில்லை.

Fish symbol at Madurai railway station

இதன் காரணமாக மீண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

எனவே பாண்டியர்கள் ஆண்ட பாண்டிய பேரரசர்களின் நினைவை கூறும் வகையில் மீன் சின்னத்தை ரயில் நிலைய வளாகத்தில் மீண்டும் ரயில்வே அதிகாரிகள் வைக்க வேண்டும் என தமிழர் கட்சி மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பாக மதுரை ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் திருவள்ளுவர் சிலை அருகே இன்று(ஜூன் 19) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முறையாக மீண்டும் ரயில் நிலைய வளாகத்தில் மீன் சின்னத்தை நிறுவவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழர் கட்சி மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இராமலிங்கம்

வேகமாக சென்றால் அபராதம்: சென்னை போலீஸ்

சிக்கலில் மாமன்னன்: உதயநிதியுடன் மீண்டும் மோதும் தயாரிப்பாளர்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *