நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி-க்களுடன் மோதலில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் இன்று (டிசம்பர் 19) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.
அப்போது இந்தியா கூட்டணியை எதிர்த்து பாஜக கூட்டணி எம்.பி.க்களும், பாஜக கூட்டணியை எதிர்த்து இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் இந்த கோஷம், வாக்குவாதமாக மாறி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை தள்ளி விட்டதாகவும், அவர் வந்து என் மீது விழுந்ததால் தான் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டுவிட்டதாகவும் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பாஜக எம்.பி-க்களை ராகுல் காந்தி தள்ளி விட்டதாக நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்ற மத்திய அமைச்சர் அனுராக் சிங் தலைமையிலான பாஜக எம்.பி.க்கள் குழு புகார் அளித்தனர்.
இந்தநிலையில், ராகுல் காந்தி மீது பிரிவு புதிய குற்றவியல் சட்டம் பிரிவுகள் 117, 125, 131, 351, 3(5) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநர் அழுத்தம் கொடுக்கவில்லை: டி.ஆர்.பாலு
2034 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி!