திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Published On:

| By Monisha

FIR on DMK MLA's son daughter-in-law

வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவான்மியூரில் உள்ள திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணனின் வீட்டில் 17 வயது இளம்பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைகள் அதிகமாக இருந்ததால் அந்த பெண் வீட்டிற்கே செல்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இங்கு தான் வேலை செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணின் செல்போனை பிடுங்கி வைத்து கொண்டு ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக ஆபாசமாக பேசுவது, தாக்குவது, சூடு வைப்பது என தொடர்ந்து வேலைக்கு வந்த பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

குழந்தை பாதுகாப்பு சட்டம், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், தாக்குதல் நடத்தியது, ஆபாசமாகப் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் அப்பீல் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

’டிடி தமிழ்’… மக்கள் எதிர்பார்க்கும் நிகழ்ச்சிகள் இருக்கும்: எல்.முருகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel