ஆடைத் துறையில் நிதி நெருக்கடி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

அரசியல்

ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரக் கால கடன் வரி உத்தரவுத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், “கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணிகளால் ஆடை ஏற்றுமதித் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது .

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் இப்போது கூர்மையான சரிவைக் காட்டுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சந்தைகளைப் பூர்த்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி தொகுப்புகளில் ஒன்றான திருப்பூர் அலகில் 95% குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோடைக் காலத்திற்கான கொள்முதல் ஆணைகள் தற்போது சுமார் 40% குறைந்துள்ளன.

குறைந்த தேவை காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி பிரிவுகளும் அவற்றின் குறு சிறு நிறுவன வினியோகஸ்தர்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.

தொழிலாளர் வர்க்கத்தில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ள கிராமப்புறப் பெண்கள் வேலைவாய்ப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர, ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குச் சிறப்பு அவசரக்கால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவிக்குமாறும்,

புதிய திட்டத்தின் கீழ் 20 சதவீதம் கூடுதல் பிணையமற்ற கடன் வழங்கப்படலாம்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

டி20 உலகக்கோப்பை: வெற்றியைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *