பிடிஆரை சந்தித்த நிதித்துறை அதிகாரிகள்!

அரசியல்

முன்னாள் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அத்துறை அதிகாரிகள் இன்று (மே 12) சந்தித்துப் பேசியுள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் நேற்று புதிதாக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டார். மேலும் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. அதில் நிதித்துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனின் இலாகாவும் மாற்றப்பட்டது. தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை பிடிஆருக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து பிடிஆர், “உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலாகாவை முதல்வர் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (மே 12) நிதித்துறை அதிகாரிகள் பழனிவேல் தியாகராஜனைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பழனிவேல் தியாகராஜன்,

“நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை ஐஏஎஸ் அதிகாரிகளான முருகானந்தம், மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் என்னை வந்து சந்தித்தனர். எனக்கு புதிய துறை ஒதுக்கியதற்காக வாழ்த்துத் தெரிவித்தனர்.

அவர்களின் மகத்தான பங்களிப்புகளுக்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். இவர்களின் பங்களிப்பு இல்லாமல் நிதித்துறையில் இவ்வளவு சாதனையை அடைந்திருக்க முடியாது. அவர்களிடம் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.

எனது பதவிக் காலத்தில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் : மாணவர்களை முந்திய மாணவிகள்!

“எனக்கு குழந்தை திருமணம் நடந்தது”: ஆளுநர் ரவி

+1
0
+1
0
+1
0
+1
9
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *