பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பல்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று புது டெல்லியில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகளை அழைத்துப்பேசி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
இதில், வேளாண்மைத் துறை பிரதிநிதிகள், தொழிலாளர்கள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலும், இந்த கூட்டத்தில் உள் கட்டமைப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த மாதம் 28 ஆம் தேதி வரை பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை நடத்திட மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!