மத்திய பட்ஜெட் தாக்கல் எப்போது? வெளியான புதிய அறிவிப்பு!

Published On:

| By Selvam

18-வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.

பிரதமர் உள்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். இந்தநிலையில், ஜூலை 2-ஆம் தேதியுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், வரும் ஜூலை 23-ஆம் தேதி 2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (ஜூலை 6) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை 2024-2025-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி 2024- 2025-ஆம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கடந்த பிப்ரவரி மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தேர்தல் முடிந்துள்ள நிலையில், முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை… சென்னையை பார்த்தாலே பயமா இருக்கு… அனிதா சம்பத் ஷாக் வீடியோ!

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் நோக்கம் இல்லை”: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share