இன்று பிறந்தநாள் கொண்டாடும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் இரண்டாவது பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கருதப்பட்டாலும், இவரே முதல் முழு நேர பெண் நிதி அமைச்சராக திகழ்கிறார்.
முதலாவது பெண் நிதியமைச்சராக இருந்த இந்திரா காந்தி குறுகிய காலத்திற்கு (1970-71) மட்டுமே நிதியமைச்சராக பணியாற்றினார்.
நிர்மலா சீதாராமனுக்கு இன்று (ஆகஸ்ட் 18) பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் மதிப்புமிக்க சக அமைச்சரவை உறுப்பினர் நிர்மலா சீதாராமன் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் முன்னணியில் இருக்கிறார். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள், நமது நாட்டின் முதல் முழுநேர நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமரின் மாற்றத்திற்கான யோசனைகளை களத்தில் செயல்படுத்துவதில் ஒரு சாம்பியன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மோனிஷா