நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று (ஜூன் 1) 57 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில், இதுவரை 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், 7ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று 57 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதாவது, பஞ்சாப்பில் 17 தொகுதிகளுக்கும், ஹிமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஒடிசாவை பொறுத்தவரை 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் நிலையில், இன்றைய தினமே சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்று வரும் 7ஆம் கட்ட தேர்தலில் மொத்தம் 10.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில் ஆண்கள் 5.24 கோடி, பெண்கள் 4.82 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 3,574 பேர். வாக்களிக்க வசதியாக 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
9 மணி நிலவரம்
நடைபெற்று வரும் இறுதிக்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தமாக 11.3 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
பீகார் – 10.6%
சண்டிகர் – 11.6%
ஹிமாச்சல பிரதேசம் – 14.4%
ஜார்க்கண்ட் – 12.2%
ஒடிசா – 7.7%
பஞ்சாப் – 9.6%
உத்தரப்பிரதேசம் – 12.9%
மேற்கு வங்கம் – 12.6%
11 மணி நிலவரம்
காலை 11 மணி நிலவரப்படி, 7ஆம் கட்ட தேர்தலில் 26.3 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
பீகார் – 24.3%
சண்டிகர் – 25%
ஹிமாச்சல பிரதேசம் – 31.9%
ஜார்க்கண்ட் – 29.6%
ஒடிசா – 22.6%
பஞ்சாப் – 23.9%
உத்தரப்பிரதேசம் – 28%
மேற்கு வங்கம் – 28.1 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
1 மணி நிலவரம்
7 ஆம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
பீகார் – 35.7%
சண்டிகர் – 40.1%
ஹிமாச்சல பிரதேசம் – 48.6%
ஜார்க்கண்ட் – 46.8%
ஒடிசா – 37.6%
பஞ்சாப் – 37.8%
உத்தரப்பிரதேசம் – 39.3%
மேற்கு வங்கம் – 45.1 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணி கூட்டம்… – ஸ்டாலின் வெளியிட்ட மெசேஜ்!
புனே சொகுசு கார் விபத்து: சிறுவனின் தாயார் கைது!