ஃபெஞ்சல் புயல் பாதிப்பு : மக்களவையில் திமுக நோட்டீஸ்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் இன்று (டிசம்பர் 3) திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி இரவு கரையை கடந்தது.

இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது.

இதனாலும் சாத்தனூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளன.

விவசாய நிலங்களில் பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகளையும் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு நேற்று மாலை கடிதம் ஒன்று எழுதினார்.

அதில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாய் அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக விவாதிக்க கோரி மக்களவையில் திமுக எம்பி கனிமொழி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

அதில் இடைக்கால நிவாரணமாக 2000 கோடி ரூபாய் வழங்குவது குறித்தும் மத்திய குழுவை அனுப்புவது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

நேற்று திமுக எம்பி டி ஆர் பாலு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பீட்டை கணக்கிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதே கோரிக்கையை மதிமுக எம்பி துரை வைகோவும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மழை வெள்ள பாதிப்பு… ரூ.2000 கோடி வேண்டும் : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

மத்திய அமைச்சர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு: என்ன காரணம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel