மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 16-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம் சென்னை எச்எம்எஸ் அலுவலகத்தில் ஜனவரி 23-ஆம் தேதி தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் எம்பி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கி.நடராஜன், பி.பன்னீர்செல்வம், எம்.சண்முகம், என்.தனசேகரன், (தொமுச), டி.எம்.மூர்த்தி, ஆர்.ஆறுமுகம் (ஏஐடியுசி) வி.குமார், (சிஐடியு) க.அ.ராஜாஸ்ரீதர், மு.சுப்பிரமணியன், பி.மோகன்தாஸ், (எச்எம்எஸ்)
ந.க.நாராயணசாமி, பி.சுகுமாரன் (ஐஎன்டியுசி) வி.சிவக்குமார், (எஐயூடியூசி) எம்.திருநாவுக்கரசு. உ.அதியமான் (ஏஐசிசிடியு) கே.ராம்பாபு (டபுள்யுபிடியுசி) எஸ்.மாயாண்டி (டியுசிசி), இரா.அந்திரிதாஸ், (எம்எல்எப்) க.பேரறிவாளன் (எல்எல்எஃப்) ஏ.எஸ்.குமார், ஜி.முனுசாமி (எல்டியுசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்! February 26 all trade unions strike
மத்திய அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்களின் பல்வேறு பிரிவுகள் ஏற்கனவே பல முனைப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர், விவசாய சங்கங்களின் பெரும் திரள் அமர்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை, மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரம், போராட்டங்களின் மூலம் வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டணியை எதிர்த்துத் தோற்கடிப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு நமது தோள்களில் உள்ளது.
இதனை மையமாகக் கொண்டு நாம் முடிவு செய்தவாறு ஜனவரி 26 ஆம் தேதி விவசாயிகள் ஐக்கிய முன்னணி விடுத்த அழைப்பின்படி நடக்கும் மாவட்ட அளவிலான டிராக்டர்/வாகன அணிவகுப்பில், தொழிற்சங்கங்களின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், தொழிலாளர்களும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களோடு சென்று பங்கேற்க சிறப்பாக திட்டமிட்டுள்ளதாக விவரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
பிப்ரவரி 16ம் தேதி வேலை நிறுத்தம், கிராமங்களில் முழு அடைப்பு, மறியல் உள்ளிட்ட வடிவங்களில் போராட்டம் நடத்த வேண்டும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் ஐக்கிய முன்னணியின் கூட்டு கூட்டம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு முன்பாக துறைவாரியாகவும், தொழிற்சாலை அளவிலும் வேலைநிறுத்த முனறிவிப்பு நோட்டீஸ் தர வேண்டும். பிப்ரவரி 16 ஆம் தேதி வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற தக்க அனைத்து பரப்புரை உள்ளிட்ட ஏற்பாடுகளையும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் சங்கங்களின் ‘கிராமப்பற பந்த்’ போராட்டம் வெற்றிபெற அனைத்து ஒத்துழைப்புகளையும் தொழிற்சங்கங்கள் வழங்க வேண்டும்.
வேலை நிறுத்தம், ‘கிராமப்புற பந்தி’ நடைபெறும் அதே நாளில் மாவட்ட தலைநகர்களிலும், தொழில் மையங்களிலும் மத்திய அரசு அலுவலங்கள் முன்பாக மறியல் போராட்டங்கள் நடத்த வேண்டும்.
கோரிக்கைகளை விளக்கி விரிவான பரப்புரை இயக்கம் மேற்கொள்ள வேண்டும். தெருமுனை கூட்டங்கள், ஆலைவாயில் கூட்டங்கள், தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை விநியோகத்தல் உள்ளிட்ட வடிவங்களில் இந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்.
இளைஞர், மாணவர், பெண்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய துறையினர், சிறுகுறு தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள், கோரிக்கையை ஆதரித்து போராட உடன் வரும் மக்கள் அமைப்புகளிடமும் ஆதரவு கோரி, மறியல் போராட்டத்தில் பங்கேற்க செய்திட வேண்டும்.
அனைத்து தொழிற்சங்கங்களின் மாவட்ட குழு கூட்டங்களை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து நடத்தி, பரப்புரை இயக்கம் மற்றும் டிராக்டர்/வாகன பேரணிக்கு விரிவான திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் மூடப்படும் ரயில் நிலையம்: எது தெரியுமா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
February 26 all trade unions strike