எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை வலியுறுத்துகிறேன் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (மார்ச் 1 ) நடைபெற்று வருகிறது.
இதில்,காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பேசுகையில், “ நீங்கள் தமிழகத்திற்கு மட்டும் சேவை செய்யாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேவை செய்வதற்காக நீண்ட காலம் வாழ்வீர்கள். இந்தியா இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, அதை முறியடிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை வலியுறுத்துகிறேன் என்று கூறினார்.
எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இந்திய குடிமக்கள் தான். உறுதியான நம்பிக்கை உள்ள ஒவ்வொருவராலும் நாட்டின் போக்கை மாற்ற முடியும் என்று பேசினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தொடங்கியது ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அகிலேஷ் யாதவ்