Chhattisgarh Exit poll 2023

சத்தீஸ்கர் எக்ஸிட் போல்: ஆட்சியை தக்க வைக்கிறது காங்கிரஸ்!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஐந்து மாநிலங்களிலும் நவம்பர் 7-ம் தேதி தொடங்கி இன்று (நவம்பர் 30) வரை தேர்தல் நடைபெற்றது. வருகின்ற டிசம்பர் 3-ம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

மொத்தம் அங்கு 90 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 46 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை வெல்லும் கட்சி ஆட்சி கட்டிலில் அமரும். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் எக்ஸிட் போல் நிலவரம்:

இந்தியா டிவி (சி.என்.எக்ஸ்) – காங்கிரஸ் (46-56) பாஜக (30-40), மற்ற கட்சிகள் (3-5)

டைம்ஸ் நவ் (ஈடிஜி சர்வே) – காங்கிரஸ் (34-36), பாஜக (26-30), மற்ற கட்சிகள் (2-4)

இந்தியா டுடே (அக்சிஸ் மை இந்தியா) – காங்கிரஸ் (40-50), பாஜக (36-46), மற்ற கட்சிகள் (0)

ஜீ நியூஸ் (ஜன் கி பாத்) – காங்கிரஸ் (42-53), பாஜக (35-45), மற்ற கட்சிகள் (3)

பி-மார்க் – காங்கிரஸ்(46-54), பாஜக(35-42) மற்ற கட்சிகள் (0-2)

ஏபிபி நியூஸ் (சி வோட்டர்) – காங்கிரஸ் (41-53), பாஜக (36-48), மற்ற கட்சிகள் (0-2)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

EXIT POLL 2023: ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கிறது!

எக்சிட் போல் 2023- தெலங்கானாவைத் தட்டித் தூக்கும் காங்கிரஸ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *