bjp again coming to rajasthan ahead of congress

EXIT POLL 2023: ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கிறது!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி இன்று வரை நடைபெற்றன. இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (Exit Poll) தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தின் எக்ஸிட் போல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் எக்ஸிட் போல் நிலவரம்:

ஜீ நியூஸ் (ஜன் கி பாத்) –    பாஜக (100-122), காங்கிரஸ் (62-85)), மற்றவை (14-15)

பி மார்க் – பாஜக (101-125), காங்கிரஸ் (69-81)), மற்றவை (05-15)

டைம்ஸ் நவ் (ஈடிஜி சர்வே) – பாஜக (108-128), காங்கிரஸ் (56-72), மற்றவை (13-21)

இந்தியா டுடே (அக்சிஸ் மை இந்தியா) –  பாஜக (80-100), காங்கிரஸ் (86-106), மற்றவை (9-18)

இந்தியா டிவி (சி என் எக்ஸ்)  –  பாஜக (80-90), காங்கிரஸ் (94-104 ), மற்றவை (9-18)

போல்ஸ்ட்ராட் – பாஜக (100-110), காங்கிரஸ் (90-100), மற்றவை (5-15)

Rajasthan Election: Who is leading among Rajput, Muslim, Jat, Meena and Gujjar voters? Check India TV-CNX poll | Rajasthan News – India TV

ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 101 தொகுதிகள் தேவை.

பெரும்பாலான ஏஜென்சிகள் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் நிலவரப்படி,  இந்த முறை காங்கிரஸ் கட்சியை அகற்றி பெரும்பான்மை வெற்றியுடன் பாஜக மீண்டும் ஆட்சியில் அமரும் என்று கணித்துள்ளன.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மிசோரம் எக்ஸிட் போல் : முன்னிலையில் ஜோரம் மக்கள் இயக்கம்!

எக்சிட் போல் 2023 மத்திய பிரதேசம்: காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *