கல்லூரி மாணவர் முதல் இறுதி நிமிடம் வரை : மன்மோகன் சிங்கின் போட்டோ கேலரி!

Published On:

| By Kavi

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் (டிசம்பர் 26) இரவு வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல் இன்று (டிசம்பர் 28) அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி, ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மன்மோகன் சிங் பல்வேறு காலங்கட்டங்களில் எடுத்த புகைப்படம் முதல் அவரது இறுதிச்சடங்கு வரையில் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கிறோம்.

பஞ்சாப் பல்கலை மாணவராக மன்மோகன் சிங். (மேல் வரிசையில் வலதுபுறத்தில் இருந்து இரண்டாம் நபர்)

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மன்மோகன் சிங், அருகில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

தனது மகள்களுடன் மன்மோகன் சிங் – நியூயார்க்கில்

நிதியமைச்சராக மன்மோகன் சிங்

மும்பையில் உள்ள நேரு மையத்தில் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) திறப்பு விழாவின் போது -1994 – மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார்.

ஜேஆர்டி டாடாவுடன் மன்மோகன் சிங்

பிப்ரவரி 19, 1995 அன்று மும்பையில் புதிய HDFC வங்கியின் கருவூல அறை திறப்பு விழாவில் இந்தியாவின் நிதியமைச்சராக டாக்டர் மன்மோகன் சிங்

அன்னை தெரசாவுடன் டாக்டர் மன்மோகன் சிங்

மும்பையில் மன்மோகன் சிங்

2004ல் பிரதமராக பதவி ஏற்றபோது

2009ல் பிரதமராக பதவி ஏற்ற போது

பிரதமர் ஆன போது குடும்பத்தினருடன் கொண்டாட்டம்.

பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி தொடர்பாக காங்கிரஸ் ஆலோசித்தபோது

2017ல் நாட்டின் ‘பொருளாதார நிலை’ ஆய்வறிக்கையை வெளியிட்ட மன்மோகன் சிங்

தசரா கொண்டாட்டத்தில் மன்மோகன் சிங்

பிரனாப் முகர்ஜியின் புத்தக வெளியீட்டு விழாவில்

இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது

பிரனாப் முகர்ஜியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன மன்மோகன் சிங்

2018 மார்ச் 13 அன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகளுக்கு விருந்து அளித்தபோது

பிரணாப் முகர்ஜி அறக்கட்டளையின் தொடக்க விழாவில் முக்கிய பிரமுகர்களுடன் மன்மோகன் சிங்
2018- ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நினைவேந்தல் தேசியக் குழுக் கூட்டத்தில்
நேருவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு சாந்தி வனத்தில் அஞ்சலி செலுத்தியபோது

ராகுல் காந்தி வழங்கிய இப்தார் விருந்தில்

வாஜ்பாயுடன் மன்மோகன் சிங்

வெங்கைய நாயுடுவின் “மூவிங் ஆன்… மூவிங் ஃபார்வேர்ட்: ஏ இயர் இன் ஆபீஸ்” புத்தக வெளியீட்டு விழாவில்

காங்கிரஸ் நிறுவன நாள் அன்று கேக் வெட்டி கொண்டாட்டம் – 28/12/2018

2022ல் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க வந்தபோது

2023 ஆகஸ்ட் 7 கடைசியாக நாடாளுமன்றத்திற்கு வந்த போது…

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞருடன் மன்மோகன் சிங்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன்

சிஎன்என்-ஐபிஎன் இந்தியன் ஆஃப் தி இயர் விருதை 2009ல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வழங்கினார்.

இறுதி பயணத்தில் மன்மோகன் சிங்… தலைவர்கள் அஞ்சலி

தொகுப்பு – பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

போட்டி போட்டுப் பாத்துடுவோமா? ஐ.டி.விங் கூட்டத்தில் செந்தில்பாலாஜி போட்ட போடு!

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தினமும் 10 முட்டை கொடுத்தாரா ஞானசேகர்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel