பொன்முடியை தொடர்ந்து ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (டிசம்பர் 21) தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பொன்முடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளார். ஊழல் செய்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக பல அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும். தற்போது ஒரு விக்கெட் விழுந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அடுத்தடுத்து விக்கெட் விழும். இது திமுகவுக்கு ஜெயில் காலம்.
பொன்முடிக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், ஊழல் செய்த அவர் தப்பிக்க முடியாது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான ஜோடிக்கப்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதனை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பொன்முடி
பொன்முடி வழக்கில் தாமதமான தீர்ப்பு: அண்ணாமலை கருத்து!
எதொ ஆளுனர் தயவுல உங்க காலம் ஒடிட்டிருக்கு அண்ணா, வர்றப்போற தேர்தல்ல நீங்க எத்தனை சீட்டு அவிங்களுக்கு குடுக்கப் போறீங்கனு தெரிஞ்சப்புறம் இருக்கு உங்க எல்லாத்துக்கும் கச்சேரி.