முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு டம்மி பீஸ் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை காசிமேட்டில் இன்று (டிசம்பர் 26) அதிமுக சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை திமுக அரசு எந்தவொரு நிவாரணமும் வழங்கவில்லை. புயல் கரையை கடந்த மகாபலிபுரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்று பார்வையிடவில்லை.
மீனவர்கள் அனைவரும் அதிமுக-விற்கு ஓட்டு போடுவார்கள் என்ற ஒரே காரணத்தினால் அவர்களை திமுக அரசு வஞ்சித்து வருகிறது. மீனவர்களை சந்திக்க திமுகவிற்கு தைரியம் இல்லை. கடமைக்கு சுனாமி நினைவு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அந்த துறை குறித்து எதுவும் தெரியாது. அவர் ஒரு பெரிய வியாபாரி.
வியாபாரிக்கு மீனவர் நலத்துறையை ஒதுக்கினால் பணக்கணக்கை தான் பார்ப்பார், மீனவர்கள் நலனை பார்க்க மாட்டார். புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடவில்லை.
கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனில் தான் திமுக அரசு குறிக்கோளாக உள்ளது. ஓபிஎஸ் ஒரு டம்மி பீஸ். ஒரிஜினல் பீஸ் கிடையாது.
அதிமுக கொடி, சின்னம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று அவருக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. அதற்கு அவர் பதிலளிப்பதை விட்டுவிட்டு டம்மி நோட்டீஸ் என்று கூறியுள்ளார்.
அவர் டம்மியாக இருப்பதால், அவர் பார்ப்பதெல்லாம் டம்மியாக உள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரன் அண்ணனை அடையாளம் காட்டியது அதிமுக தான். தற்போது அவர் திமுக-வின் பி டீமாக செயல்படுகிறார்.
அதிமுகவை இணைப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று சசிகலா கூறியிருப்பது வடிகட்டிய பொய்.
அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே உருவான ஒரு உருவம் என்றால் அது சசிகலா தான்.
தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்து பொங்கல் பரிசாக வழங்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யவில்லை என்றால் அது விவசாயிகளுக்கு செய்கிற பெரிய துரோகம்.” என்றார்.
செல்வம்
விமர்சித்த ரசிகர்: அஸ்வின் பதிலடி!
ஐஏஎஸ் அதிகாரி கார் விபத்து: லிப்ட் கொடுத்த எம்.எல்.ஏ