“பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தில் சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு. அதன்படி அண்ணாமலை கைது செய்யப்படுவாரா?” என்று காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் இருந்த பெண் அரசியல்வாதிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம்.
எனினும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் – சூர்யா சிவா ஆகியோருக்கு இடையிலான அருவருக்கத்தக்க உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு காயத்ரி ரகுராம் தான் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதில் அதிருப்தி அடைந்த காயத்ரி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்க, அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும் அக்கட்சி தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இதனையடுத்து அண்ணாமலைக்கு எதிராக நாள்தோறும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் இண்டிகோ விமானத்தின் கதவு திறக்கப்பட்ட விவகாரம் மீண்டும் வெடித்துள்ள நிலையில், அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்ததுடன் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”யார் செய்த சேட்டை ? எங்க __ செய்த சேட்டை.
நினைவிருக்கிறதா? இது தேசிய குற்றம். பயணிகளை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக அவர்கள் சட்டபூர்வமாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால் செல்வாக்கு அவர்களை காப்பாற்றியது.
நேபாள விமான விபத்துக்குப் பிறகு இண்டிகோ விமான நிறுவனங்கள் கருணை காட்டாமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு. கர்நாடக வளர்ப்பு மகன் சென்னை திருச்சி விமானத்தில் சென்ற 100 பயணிகள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டார் என்பது எப்படிச் சரி? சட்டப்படி 1. மன்னிப்பு கடிதத்தை வாங்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நிகழ்வு அடிப்படையில் புகார் கொடுத்து உரிய நபரை மாநில காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
பிரஸ்மீட் போல விமான நிறுவனத்தை இருவரும் (அண்ணாமலையும், தேஜஸ்வியும்) மிரட்டினார்களா? வளர்ப்பு மகனை விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பது வாரிசு அரசியலின் அலங்கோல முகம்.
அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன்.. இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது. எச்சரிக்கை காரியகர்த்தாக்கள்.” என பதிவிட்டுள்ளார்.
எனினும் விமானத்தின் கதவு திறந்தது தொடர்பான விசாரணையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது மத்திய பாஜக அரசின் துணையுடன் விசாரணையில் இருந்து விலக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நண்பகல் நேரத்து மயக்கம் தமிழ் படமா?
”திமுக ஆட்சியை கலைக்க முடியும்!- காரணம் சொன்ன செல்லூர் ராஜூ