நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் கரூரில் இன்று (செப்டம்பர் 2) சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தன் மனைவி, மகளை மிரட்டி பத்திரப்பதிவு செய்துகொண்டதாக பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை கேரளாவில் போலீசார் கைது செய்தனர். பின்னர், கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது சகோதரர் சேகரும் முன்ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சாட்சிகளை கலைத்துவிடுவார் என குற்றஞ்சாட்டி சேகருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கரூர் அருகே தலைமறைவாக இருந்த சேகர் உட்பட இருவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அடுத்த ஏழு நாட்களுக்கு…. வானிலை மையம் முக்கிய அப்டேட்!
நடிகர் விஜயகாந்தின் முதல் தயாரிப்பாளர் யார் தெரியுமா? சமீபத்தில் உயிரிழந்த சோகம்!