ஈரோடு இடைத்தேர்தல்: 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி!

அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் என 77வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் கடந்த மாதம் 27ம்தேதி நடந்தது. மொத்தமுள்ள வாக்காளர்களில் 74.79சதவீத வாக்குகள் பதிவானது. அதாவது மொத்தம் ஒரு லட்சத்து 69ஆயிரத்து 945வாக்குகள் பதிவாகின.

அதனைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.மொத்தம் பதிவான 398 வாக்குகளில் காங்கிரஸ் 250வாக்குகளும், அதிமுக – 104வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு – 10 வாக்குகளும் தேமுதிக 1 வாக்குகளும் பெற்றன.

தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகின்றன.

இதிலும் முதல்சுற்று முதலே ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் கடந்த தேர்தலில் 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் 9வது சுற்றிலேயே 70 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள் பெற்று முன்னிலையில் தொடர்ந்தார் அரது தந்தையும், காங்கிரஸ் வேட்பாளருமான ஈவிகேஎஸ் இளங்கோவன்.

இந்நிலையில் தற்போது மொத்தமுள்ள 15 சுற்றுகள் முடிவில் 1,10,556 வாக்குகள் பெற்று 66,575 வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,981 வாக்குகளை பெற்று 2-வது இடத்தை பெற்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி மேனகா நவநீதன் 10,804 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,177 வாக்குகளும் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளனர்.

இதன்மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாக நுழைகிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

கிறிஸ்டோபர் ஜெமா

கன்னியாகுமரியில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை!

போலி கவுரவ டாக்டர் பட்டம் சர்ச்சை: ஐ.ஏ.ஹெச்.ஆர்.சி அமைப்பு விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *