ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (மார்ச் 10) சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அறையில் வைத்து பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
முன்றாவது முறையாக அதிபராக பதிவியேற்றார் ஜி ஜிங்பிங்
“12 வருட கனவு நிறைவேறியது”: கவின்