ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி பரபரப்பாக நடந்து முடிந்தது. நேற்று (மார்ச் 2) இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த வெற்றிக்குப் பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (மார்ச் 3) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை சந்தித்தார்.
தொடர்ந்து, அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மோனிஷா
“நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருக்கிறதா?”: இளங்கோவன் கேள்வி!
சென்னை உயர்நீதிமன்றம்: 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!