மருத்துவமனையில் சிகிச்சை… ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நலம் விசாரித்த ஸ்டாலின்

Published On:

| By Minnambalam Login1

evks elangovan stalin meet

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும்,  சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 28) சந்தித்து நலம் விசாரித்தார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 27) திடீரென அவருக்கு நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஈவிகேஎஸ் இளங்கோவனை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 28) காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்எல்ஏ-வுமான செல்வப்பெருந்தகை இளங்கோவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மியாட் மருத்துவர்களிடம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் “இளங்கோவன் ஏற்கனவே மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவருடைய உடல்நிலை சற்று பின்னடைவை சந்தித்தது.

இதனால் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நானும் முதல்வர் ஸ்டாலினும் இன்று அவரை சென்று பார்த்தோம்.

மியாட் மருத்துவமனை அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. அவர் மீண்டும் குணமடைந்து வருவார். வருகின்ற 9ஆம் தேதி சட்டமன்றம் கூடவிருக்கிறது.

அவரது குரலைக் கேட்பதற்கு நாங்களெல்லாம் ஆவலுடன் இருக்கிறோம். மக்கள் பணிக்கு அவர் மீண்டும் திரும்புவார்.” என்று கூறினார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ரூ.1.20 லட்சம் சம்பளம், ஆனால் அரசு வேலை இல்லை… மணப்பெண் எடுத்த விபரீத முடிவு !

‘செக்யூலர்’ ‘சோஷலிஸ்ட்’ ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் அங்கங்களா?

“ஸ்டாலினைப் போல் அரசியல் ஞான ஒளி எனக்கில்லை” – ராமதாஸ் பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel