தேர்தலில் நாங்கள் பெரிய வெற்றியை பெற்றாலும் அதனை கொண்டாடக்கூடிய மனநிலையில் நான் இல்லை என்று ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (மார்ச் 2) தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. துவக்கம் முதலே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட முன்னிலையில் இருந்தார்.
இந்தநிலையில், தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஈவி.கே.எஸ் இளங்கோவன், “வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை சந்திக்க டெல்லிக்கு செல்வேன். தேர்தலில் நாங்கள் பெரிய வெற்றியை பெற்றாலும் அந்த வெற்றியை கொண்டாடக்கூடிய மனநிலையில் நான் இல்லை.
மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடர வேண்டும். மக்களுக்காக அவன் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் என்னிடம் கூறிய கோரிக்கைகளை நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
திரிபுரா நாகாலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை!