ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவம்பர் 13ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, “இளங்கோவனின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். ஒரு மருத்துவருக்காக காத்திருக்கிறோம்… சாரி” என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக் குறைவால் காலமானார்.
செய்திகளைஉடனுக்குடன்பெறமின்னம்பலம்வாட்ஸப்சேனலில்இணையுங்கள்….
பிரியா