ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று (மார்ச் 3 ) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் தொடக்கத்திலிருந்து முன்னிலை வகித்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை காங்கிரஸ், திமுக, கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்தநிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்தார்.
பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாழ்த்து பெற்றார். அவருடன் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் உடனிருந்தனர்.
செல்வம்
குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
காலநிலை அறிவு இயக்கம்: முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!