நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதற்காக திமுக அமைச்சர்கள் பட்டாளமே ஈரோடு கிழக்கில் முகாமிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது.
இந்நிலையில் ஈவிகேஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.
இந்த சூழலில் நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதயவியல் மருத்துவர்கள் நேற்று இரவு அவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்தோ ஈவிகேஸ் இளங்கோவன் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பிரியா
தி.நகர் பத்மாவதி தாயார் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!