மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் இன்று (டிசம்பர் 15) தகனம் செய்யப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 14) காலை காலமானார்.
அவரது உடல் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை மணப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து இளங்கோவன் உடல் முகலிவாக்கம் மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் 48 குண்டுகள் முழங்க இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.
இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக பொதுக்குழு கூட்டம்… நல்ல நேரத்திற்காக காத்திருந்த எடப்பாடி
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேறிய 16 தீர்மானங்கள் : முழு விவரம்!