நாம் தமிழர் என்று ஒரு கட்சி இருக்கிறதா என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று (மார்ச் 3) சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வெற்றி, முதல்வர் ஸ்டாலினின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தமிழகத்தில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒவ்வொரு நாளையும் முதல்வர் கூர்ந்து கவனித்து இந்த வெற்றியை எங்களுக்கு தந்துள்ளார்.
பாஜக, அதிமுக கூட்டணி தெளிவில்லாமல் இருந்தது. திமுக கூட்டணி தெளிவாக இருந்தது. சில இடங்களில் பாஜகவின் கொடியை அதிமுக பயன்படுத்த தயாராக இல்லை.” என்று தெரிவித்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியபோது, “வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேர்தல் சுமூகமாக நியாயமாக நடந்தது. எந்த தவறும் நடக்கவில்லை.
ஈரோட்டை பொறுத்தவரை நாங்கள் அனைவரும் நாகரிகமானவர்கள் என்று கூறினார். தோல்வி அடைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி சொல்லி கொடுத்ததை அவர் சொல்லியிருக்கிறார். சிபா ஆதித்தனார் காலத்தில் நாம் தமிழர் என்று ஒரு கட்சி இருந்தது. அந்த கட்சி இன்றைக்கும் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.” என்றவரிடம்
சட்டப்பேரவை தலைவர் பதவி உங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இப்போது சட்டப்பேரவை தலைவராக உள்ளவரே நன்றாக தான் செயல்படுகிறார். அதில் மாற்றங்கள் தேவையில்லை.” என்றார்.
செல்வம்
குட்கா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
காலநிலை அறிவு இயக்கம்: முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!