வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் சமூக வலைதள கணக்கை தொடங்க வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுக தேர்தல் பணியை தொடங்கியிருக்கிறது. இன்று (ஜூலை 26) திருச்சியில் 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ நமக்கு எதிராக அவதூறு, பொய் செய்திகளை பரப்பிட ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகக் குறைவு. அவர்கள் பொய்களையே சொல்லிக்கொண்டிருக்கட்டும்.
நாம் அரசின் திட்டங்களை சொல்லிக்கொண்டிருப்போம். இதன்மூலம் எதிர்களின் பொய்கள் எல்லாம் சுக்குநூறாகும். இன்று சமூக ஊடகம் தான் சிறப்பான பரப்புரை களமாக மாறியிருக்கிறது. பக்கத்து அறையில் இருந்துகொண்டே வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிக்கொள்கிறார்கள்.
நாம் அனுப்பக் கூடிய செய்தி ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் பரவி விடும். அந்தளவுக்கு வசதி வந்துவிட்டது. இதனை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,
எனவே நீங்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் சமூக வலைதள கணக்கை தொடங்க வேண்டும். அந்த கணக்குகளில் இருந்து அவதூறுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். நம் கொள்கைகளை பேசுங்கள், நல்லத்திட்டங்களை சொல்லுங்கள்.
தேவையில்லாத வம்பு வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். எதையாவது சொல்லி நம்மை திசை திருப்புவார்கள். இதற்கெல்லாம் நாம் பலியாகிவிடக் கூடாது” என்று கூறினார்.
பிரியா
செந்தில் பாலாஜி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!
திமுக ஃபைல்ஸ் 2 – ரூ.5600 கோடி ஊழல் : ஆளுநரை சந்தித்த அண்ணாமலை