மக்களவையிலேயே ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியவில்லை என்று ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகம் செய்வது தொடர்பான வாக்கெடுப்பு இன்று (டிசம்பர் 17) மக்களவையில் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 196 வாக்குகளும் பதிவாகியிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்தநிலையில் சிபிஐ(எம்) எம்.பி. சு.வெங்கடேசன், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “
ஒரே தேர்தல்…மக்களவையே முன்மாதிரி !
மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது.
மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.
ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது” என்று விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ரஷ்ய அணுஆயுத பிரிவு தலைவர் குண்டு வைத்து கொலை; மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய உக்கிரம்!
கள்ளச்சாராய மரண வழக்கு : சிபிஐ விசாரிப்பதில் என்ன தவறு? உச்ச நீதிமன்றம் கேள்வி!