இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுமான திருமகனின் உடல் தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏ ஆன திருமகன் நேற்று(ஜனவரி 4) திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள குடியரசு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈரோடு கனி மார்க்கட் (Gani Market) ஜவுளி வியாபாரிகள் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்துள்ளனர்.
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள ஜவுளி சந்தையில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
ஈரோடு காவிரி கரையில் உள்ள ஆத்மா மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மதியம் ஈரோடு கச்சேரி சாலையில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின் மயானத்திற்கு உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
உடல் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முன்னும் பின்னும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கலை.ரா
சஞ்சு சாம்சனுக்கு காயம்: களமிறங்கும் புதிய வீரர் இவர் தான்!
“ஆளுநர் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டவர் அல்ல” – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!