“சொல்லாமலே செய்வதுதான் ஸ்டாலின் பாணி!”-ஈரோட்டில் முதல்வர்

அரசியல்

‘ஈரோட்டில் இன்று நடைபெற்ற கலைஞர் சிலை திறப்புவிழாவில், ‘சொல்லாமலே செய்வதுதான் ஸ்டாலின் பாணி’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு கள்ளிப்பட்டியில் கலைஞரின் எட்டடி வெண்கல சிலையை இன்று (ஆகஸ்ட் 25) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இச்சிலை திறப்புவிழாவில் அமைச்சர்கள் முத்துச்சாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏற்கெனவே ஈரோட்டில் திருவிக வீதி மற்றும் பன்னீர்செல்வம் பூங்காவில் கலைஞர் சிலைகள் இருக்கும் நிலையில், இது மூன்றாவது சிலையாக இன்று திறக்கப்பட்டிருக்கிறது.

இந்த சிலை திறப்பு விழாவுக்குப் பின் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஈரோட்டுக்கும் கலைஞருக்கும் உயிரோடும் ஊனோடுமான தொடர்புகள் உண்டு.

ஈரோடு, தந்தை பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, சமூகப் போராளியாக வாழ்ந்த கலைஞர் என்ற தலைவர் உருவான ஊரும் ஈரோடுதான்.

திரையுலகில் கலைஞர் கொடிகட்டி பறப்பதற்கு முன்னால், அவருடைய குருகுலமாக இருந்த ஊர்தான் ஈரோடு.

அவர் வாழ்ந்த இந்த குருகுலத்தில், இன்றைக்கு கலைஞருடைய சிலை திறந்துவைக்கப்படுகிறது.

erode kalaingnar statue function

என்னுடைய வாழ்நாளில், இந்த மண்ணில் இந்த இடத்திலே நம்முடைய கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெருமைப்படுகிறேன்.

இதை எனக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமையாக கருதுகிறேன். கலைஞரின் சிலையை நாம் பார்க்கும்போது நாம் அவரின் உணர்வை, உணர்ச்சியை, உத்வேகத்தை, உற்சாகத்தை, மகிழ்ச்சியைப் பெறுகிறோம்; பூரிப்படைகிறோம்.

அவரைப்போல் பேச முடியாது; எழுத முடியாது; உழைக்க முடியாது என்று சொன்னாலும், அவர் நினைத்திருந்த காரியங்கள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொள்வதுதான் இவை அனைத்துக்கும் மேலாக நான் நினைப்பதாகும்.

erode kalaingnar statue function

ஐந்து முறை ஆட்சியில் இருந்த கலைஞர், தமிழ்ச் சமூகத்திற்காக ஏராளமான திட்டங்களையும் சாதனைகளையும் நிறைவேற்றியுள்ளார்.

அண்ணா மற்றும் கலைஞரின் வழியில் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் நாம், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ’சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ என்பது கலைஞரின் பாணி.

‘சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலேயும் செய்வோம்’ இதுதான் கலைஞர் பெற்றெடுத்திருக்கக் கூடிய இந்த ஸ்டாலினின் பாணி.

ஆக, இந்த பாணியை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம், தொண்டர்கள் நீங்கள் சிந்திய வியர்வையும், ரத்தமும், உழைப்பும்தான்.

இந்த சிலை திறப்பு விழாவில் நாம் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி, சபதம், நாட்டில் திராவிட மாடல் ஆட்சியை தொடர்ந்து நடத்துவோம் என்பதே” என்றார்

ஜெ.பிரகாஷ்

டிஜிட்டல் திண்ணை: 15 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்- ஸ்டாலின் கையில் ‘ரெட்’ லிஸ்ட்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *