ஈரோடு கிழக்கு: ’தெலுங்கு’ வாக்காளர்களை குறி வைக்கும் ’விடுதலைக் களம்’ 

அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.  அதிமுக- பாஜக கூட்டணி இருக்கிறதா அதிமுகவில் எடப்பாடி, பன்னீர் தனித்தனியே வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறார்களா, பாஜக தனியாக போட்டியிடப் போகிறதா என்ற கேள்விகள் எழும் நிலையில், எதிர்பாராத முகாம்களில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் தெலுங்கு பேசும் மக்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட விடுதலைக் களம் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஜனவரி 25 மாலை பவானியில் நடைபெற்ற விடுதலைக் களம் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் கரூரைச் சேர்ந்த விஜயகுமார் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக விடுதலைக் களம் கட்சியின் தலைவர் கொ.நாகராஜனிடம் பேசினோம்.  “இந்த இடைத்தேர்தல் என்பது விடுதலைக் களம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவுசெய்யப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த இடைத்தேர்தலில் விடுதலைக் களம் கட்சி போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் உள்ளடக்கிய விரிவான ஆலோசனை கூட்டம்  ஜனவரி 25 ஆம் தேதி   மாலை  பவானி  நகரில் நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட  தெலுங்கு பேசும் நாயக்கர் இன வாக்குகள் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இருக்கின்றன.

தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட தெலுங்கு  சமுதாயங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை எந்த அரசியல் கட்சியும் வழங்கவில்லை.

மேலும்  கடந்த தேர்தலில் ஸ்டாலின் 68 சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு டி.என்.டி. ஒற்றைச் சான்றிதழ் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதன்படி இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.  இந்நிலையில் எங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி  நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்” என்றவரிடம்… 

”பொதுவாக இடைத் தேர்தலில் சிறிய அமைப்புகள் வேட்பாளர்களை நிறுத்தி பிறகு பெரிய கட்சிகளிடம் பேரம் பேசும் என்ற பொதுவான ஒரு புகார் இருக்கிறதே?” என்ற கேள்விக்கு, 

 “அதற்கு நாங்கள் பொருந்த மாட்டோம். நாங்கள் எங்கள் சமுதாயத்தின் கோரிக்கைகளை பொது நீரோட்டத்தில் பதிவு செய்வதற்காகவே இந்த தேர்தல் களத்தைத் தேர்ந்தெடுத்து நிற்கிறோம்.

எந்த காலத்திலும்  நாங்கள் அதுபோன்ற  வலையில் சிக்குபவர்கள் கிடையாது. இந்தத் தேர்தலிலும் 2024 இலும் நாங்கள் தனித்துதான் நிற்போம். நாங்கள் யாருடனும் எந்த சமரச முயற்சிக்கும் இரையாக மாட்டோம்.

பாஜகவில் இருந்தே எங்களிடம் பேசினார்கள்.  நீங்கள் வேட்பாளரை அறிவிக்க வேண்டாம், நாம் பேசி முடிவு செய்வோம்’ என்றார்கள். ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை” என்றார் கொ.நாகராஜன். 

இடைத் தேர்தலில்  கரன்சி மேக வெடிப்பில் விடுதலைக் களம் போன்ற கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்று பார்ப்போம்…

வேந்தன்

இரட்டை இலை : உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி முறையீடு!

சுவாமி சகஜாநந்தா: ஆரிய சூழ்ச்சியை அம்பலப்படுத்திய தலைவர்!

+1
1
+1
0
+1
2
+1
7
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.