ஈரோடு கிழக்கு: வேட்பாளரை அறிவித்த சீமான்

அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அமமுக, தேமுதிகவை தொடர்ந்து இன்று வேட்பாளரை அறிவிப்பதற்காக சீமான் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஈரோடு மரப்பாலத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து பெண் வேட்பாளரை சீமான் அறிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்ட மகளிர் பாசறை துணை செயலாளராக இருக்கும் மேனகாவை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்தார்.

கடந்த 2021  தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி 11,629 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.