ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக முதல் சுற்று முடிவை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
காங்கிரஸ் – 8429
அதிமுக – 2873
நாம் தமிழர் – 526
தேமுதிக – 112 வாக்குகள் பெற்றுள்ளன.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் நோட்டாவும், சுயேட்சைகளாக போட்டியிட்டவர்கள் 40க்கும் அதிகமானவர்களும் வாக்கு கணக்கைத் தொடங்கியுள்ளனர்.
இதில் நோட்டா தற்போது வரை 23 வாக்குகள் பெற்றுள்ளது. முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரியா
மேகாலயா: பாஜகவை பின்னுக்கு தள்ளிய தேசிய மக்கள் கட்சி
விலை உயரும் தங்கம்: இன்றைய நிலவரம்!