ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவை முன்னிலையில் இருக்கிறார்.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதல் 10 நிமிடம் முதலே மொத்தம் 397 தபால் வாக்குகளில் அதிக வாக்குகளை காங்கிரஸ் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 தபால்கள் அடங்கிய பண்டுகளாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு சீட்டை அதிகாரிகள் எண்ணி வருகின்றனர்.
இந்தச்சூழலில் காலை 8.25 நிலவரப்படி, 102 வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையிலிருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 52 வாக்குகளைப் பெற்று பின் தங்கியுள்ளார்.
இன்னும் தபால் வாக்குகள் முழுமையான எண்ணி முடிக்கப்படவில்லை.
பிரியா
ரஷ்யாவுடனான உறவு; இந்தியாவின் முடிவை மதிக்கிறோம்: இங்கிலாந்து!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!